புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்/St.Michael's Prayer In Tamil
HOLY FAMILY AJ HOLY FAMILY AJ
81.8K subscribers
790,176 views
5.4K

 Published On Sep 29, 2021

புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்


வானக தூதரணியின் தலைமை தளபதியே! இறைவனின் அரியணை முன் நிற்க பேறு பெற்ற பிரபுவே !இறைவனின் கட்டளைப் படியே விண்ணுலக வாசலை திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே!
லூசிஃபரோடு இணைந்து கடவுளை எதிர்த்த வானக அரூபிகளை கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி உன் ஈட்டியால் குத்தி, எரி நரகில் தள்ளியவரே! வான்வழி ஆவிகளையும் பாதாள ஆவிகளையும் எதிர்த்து போராடி மனிதரை காக்கும் மேலான காவலரே! உம் தயவை நாடிவரும் எங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் அது தூதரே ! சாத்தானை துரத்தி முறியடிக்கும் சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் அதிதூதரே! கண்ணீர் மல்க உம்மை நாடிவரும் எங்கள் வேதனைகளை நீக்குவீராக. எங்களுக்கு எதிரான மனிதரின் சூழ்ச்சிகள் நோய்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் சாத்தானின் தீச்செயல்கள், பில்லி சூனிய கட்டுகள், ஏவல்கள், வழி போக்குகள்,கண் பார்வை திருஷ்டிகள் போன்ற தீய சக்திகளை, குத்தி எடுத்து ,இரும்பு கவசம் அணிந்த உம் கால்களால் நசுக்கி, நெருப்பு போன்ற உம் கண்களால் சுட்டெரித்து, எரி நரக பாதாளத்தில் தள்ளி எங்கள் அனைவரையும் காப்பீராக !

விண்ணுலக படைகளின் அதிபதியே !என்றும் வாழும் அரூபிகளில் மகிமை நிறைந்த வானதூதரே!உன்னத கடவுளின் நம்பிக்கையை பெற்ற தலைவரே! இறைவனின் அரியணை அருகே நிற்க பேறு பெற்றவரே! கடவுளின் கட்டளை படியே விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வல்லமை பெற்ற வானவரே! கடவுளின் நீதி அரியணை முன் எங்களை அழைத்துச் செல்லும் அதிதுதரே! இறுதி வேதனையில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் ஆதரவாளரே! வலுவற்ற எளியேனைக் கருணையுடன் பார்த்து ,என் வாழ்நாள் முழுவதிலும், சிறப்பாக, என் இறப்பு நேரத்திலும் எனக்கு தயை புரிந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்.

அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களை காத்தருளும். பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டை கேட்டு, இறைவன் பசாசைக் கண்டிப்பாராக .நீரும், விண்ணகப்படையின் தலைவரே, மக்களைக் கெடுக்க உலகில் சுற்றித் திரியும் பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும் இறை வலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.- ஆமென்.

அதிதூதரான புனித மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.(3) ஆமென்.

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.

show more

Share/Embed