Tamil Christian||The Most powerful Prayers To St. Joseph in Tamil || புனித சூசையப்பர் ஜெபம்||
Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL) Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL)
9.82K subscribers
1,116,757 views
4.7K

 Published On Apr 30, 2020

Nesa Thanthai
Composed by Fr.Denis vaiz
Singing by Jesintha
Edited by Bro.Julian punnai

மகா பாக்கியம் பெற்ற
புனித சூசையப்பரே ,

எங்களுடைய துன்பு வேளையில் உமது பரிசுத்த பத்தி னியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம் . தேவ தயாபரரான ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித கன்னிமரியாயிடத்தில் உமக் குள்ள சிநேகத்தின் பெயராலும் திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும் உம்மிடத்தில் நாங்கள் கேட் கும் மன்றாட்டு ஏதென்றால் , இயேசுகிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்திரத்தை தேவரீர் கிருபையாய் பார்க்கவும் , எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசை யால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம் ,

ஓ திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே இயேசுகிறிஸ்து தம்முடையவர்களாக தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும் . ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும் . ஓ ! எங்களை பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக திவ்விய பாலகன் முன்னால் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக்கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ , அவ்விதமே இறைவனுடைய திருச்சபையையும் பசாசின் வலையிலும் எவ்வித ஆபத்திலிருந்தும் பாது காத்தருளும் . உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது , உமது புண்ணிய மாதிரிகையாலும் உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து பக்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கிருபைசெய்ய உம்மை மன்றாடுகிறோம்
ஆமென்

#mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #mary

show more

Share/Embed