சுந்தர காண்டம் கதை பாராயண பலன்கள் முகவுரை Sundara Kandam Intro
Ayyangar Kitchen Ayyangar Kitchen
214K subscribers
35,188 views
601

 Published On Apr 21, 2019

சுந்தர காண்டம் (Sundara Kanda), வால்மீகி இராமாயணத்தின் புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.
சுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றான்.
இலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.
பின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி , பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.




யார் ஹனுமான்
எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன்.
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே.
சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானதது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் “ஹன்” என்பதற்கு “கொன்றவன்”, “மானம்” எனபதற்கு “தற்பெருமை” என்பதல், “ஹன்மான்”, என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு.
சுந்தர காண்டம்
பெயர்க்காரணம் 1
சுந்தர காண்டத்தில் ராமன் - சுந்தரன், சீதை - சுந்தரி, ஆஞ்சநேயர் - சுந்தரன், அசோகவனம் - சுந்தரம், சொற்கள் - நல்ல பலன்களை கொடுப்பவை.
பெயர்க்காரணம் 2
ஹனுமனை அவரது தாயார் அஞ்சனை சுந்தரா என்று அழைப்பார்களாம்.
சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அலலது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான் என்பது இதன் பொருள்.

In English

anjile onru petraan, anjile ondrai thaavi
anjile onraaraaga (onru aaraaga) aariyarkaaga yegi
anjile onru petra anangai kandayalaar (kandu ayalaar) ooril
anjile ondrai vaithan avan emmai alithu kaappaan

பாராயண முறைகள்
சப்த சர்க பாராயணம் - ஏழு சர்க்கங்கள் வீதம் ஏழு தடவை. பத்துநாள். பலன்கள் - எடுத்த காரியத்தில் வெற்றி, வியாதி நிவ்ருத்தி, உத்தியோக பிராப்தி.
நவாஹ பாராயணம் - ஒன்பது நாள் பாராயணம். பலன்கள் - குடும்ப க்ஷேமம், கார்ய சித்தி, விவாஹ பிராப்தி.
முப்பத்திரண்டு நாள் இரண்டு தடவை பாராயணம் - பலன்கள் - சகல கார்ய சித்தி.
ஐஸ்வர்ய பாராயணம் - எட்டு நாள் பாராயணம். பலன்கள் - மென்மேலும் செல்வம் வளர, தன லாபம், தன தான்ய வ்ரிதி, சம்பள உயர்வு.

Maha periyava suggests a short cut to read Ramayana daily

Sri Ramam, Raghu kula Thilakam,
Shiva dhansagrihatha ,
Sita hastha Karam
Angulyaabharana shobitham,
Choodamani darsana karam ,
Anjaneya Masrayam,
Vaidehi manoharam,
Vanara SAinya sevitham,
Sarva mangala Karyaanukoolam,
Sathatham Ramachandra Palaya Maam

In Tamil

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.



www.ayyangarkitchen.com
Facebook - @ayyangarkitchen

show more

Share/Embed