முருதீசுவரர் சக்தி வாய்ந்த சிவன் கோயில் | பாகம் -17 |ஆன்மீகம் | கவிக்குயில் |
கவிக்குயில் பாட்டு / Kavikuil Orchestra || கவிக்குயில் பாட்டு / Kavikuil Orchestra ||
24.8K subscribers
238 views
7

 Published On Premiered Jun 27, 2024

முருதீசுவரர் சக்தி வாய்ந்த சிவன் கோயில் | பாகம் -17 |ஆன்மீகம் | கவிக்குயில் |

முருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது 

இக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது.
இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது.
அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.

கருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).



உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.
நன்றி பக்தர்களே மீண்டும் சந்திப்போம்.

show more

Share/Embed