பொறியியல் உலகமே அதிசயிக்கும் காண்டூர் கால்வாய்! Contour Canal | Parambikulam Aliyar Project
Dinamalar Kovai Dinamalar Kovai
76.1K subscribers
126,200 views
1.6K

 Published On May 22, 2024

தமிழகத்தில் முதல் சம மட்ட கால்வாய் எங்கு கட்டப்பட்டுள்ளது என்றால் முதலாம் ராஜேந்திர சோழன் திருச்சியில் கட்டிய உய்யன் கொண்டான் கால்வாய் தான். அதற்கு அடுத்ததாக நாம் சம காலத்தில் வாழும் இந்த காலத்தில் கட்டப்பட்ட சம மட்ட கால்வாய் எது என்றால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உள்ள காண்டூர் கால்வாய். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் தொப்புள் கொடி தான் காண்டூர் கால்வாய். இதில் பல அதிசயிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இது தவிர நவமலை குகையை குடைந்து கால்வாய் அமைத்ததும் ஒரு ஆச்சரியமான விஷயம். மேலும் ஒரு மலைக்கும், மற்றொரு மலைக்கும் இடையே 45 மீட்டர் துாரத்துக்கு அந்தரத்தில் பெட்டி போன்று கட்டி அதில் தண்ணீர் கொண்டு செல்லும் அதிசய கட்டுமானமும் காண்டூர் கால்வாயில் இடம் பெற்றுள்ளது. இப்படி பொறியியல் உலகமே அதிசயிக்கும் அளவுக்கு அற்புதமான காண்டூர் கால்வாயின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #contourcanal #watersource #valparai #engineer #technology #kerala #tamilnadu #agriculture #papwater project #tunal #canal #watertunal #dinamalarkovai

show more

Share/Embed