வீரபயங்கரம் வீர அய்யனார் திருக்கோயில்| Veerapayangaram Shri Veera Ayyanar temple, Kallakurichi
Tamil Kadhalan Tamil Kadhalan
26.3K subscribers
83,776 views
1.4K

 Published On Jul 7, 2020

#Veerapayangaram #AyyanarTemple #வீரபயங்கரம் #அய்யனார்கோயில்
வீரபயங்கர அய்யனார் வகையறா கோயில் 

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், வீரபயங்கரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு எல்லை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர்தான் வீரபயங்கரம் அய்யனார்.

நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. 

நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. உள்ளே இருபுறமும் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், யானைகள், குதிரைகள், பதுமைகள் சூழ, குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அய்யனார், கருப்பையா, முனியப்பரின் தோற்றங்கள் பார்ப்போரை பயபக்திகொள்ளச் செய்கின்றன.

தலவிருட்சமான திருவாட்சி மரத்தடியிலுள்ள துர்க்கையையும் கருப்பையனையும் வணங்கி, நடுநாயகமாக அமைந்துள்ள சப்த கன்னிமார்களை வணங்கி, நிறைவாக அய்யனாரை வணங்கவேண்டும். அய்யனாரை பெரியய்யா என்றும், கருப்பையனை சின்னய்யா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். முனியப்பர் சிலையருகே ஒரே கல்லினால் செய்யப்பட்ட கற்குதிரைமீது அமர்ந்திருக்கும் சின்னய்யாவின் தோற்றம் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தக் கூடியதாகும். தவிரவும் இங்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்திய வாகனங்களும் பெருவாரியாகக் காணப்படுகின்றன.

 

ஊருக்குப் பெயர் வந்த கதை!

சிவபெருமானின் மாமனான தட்சன் மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினான். சகல தேவர்களையும் முனிவர்களையும் யாகத்துக்கு அழைத்த தட்சன் தன் மருமகனான ஈசனைப் புறக்கணித்தான். சிவன் தடுத்தும் கேளாமல் போய் அவமானப்பட்டாள் தாட்சாயணி. இதனால் வெகுண்டெழுந்த சிவன் தன்னுடைய சடையிலொன்றை பூமியிலடிக்க, அதிலிருந்து ஆவேசத் தோற்றத்துடன் கிளம்பிவந்தார் வீரபத்திரர். சிவனின் கட்டளைப்படி பூதகணங்களோடும் தாட்சாயிணி அனுப்பிய காளியோடும் சென்று தட்சனையும் யாகத்தையும் அழித்து முடித்தார் வீரபத்திரர். அத்தகைய பயங்கர தோற்றமுடைய, எவரும் பயந்து நடுங்கக்கூடிய வீரபத்திரர் வாழ்ந்த ஊர் இதுவென்கிறார்கள். அவரின் பெயரிலேயே வீரபயங்கரன் என்று வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி வீரபயங்கரம் என்றானதாம்.

#veerabayangaram temple
#Veerangi Ayyanar temple

show more

Share/Embed