திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் கோயில் |51 சக்தி பீடங்கள் தோன்ற காரணமான தலம் | ருத்ர யாகம் தோன்றிய தலம்
ஆன்மீகத்துடன் நட்பு ஆன்மீகத்துடன் நட்பு
85.3K subscribers
3,890 views
147

 Published On Premiered Jul 29, 2024

#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள்
#வீரட்டேஸ்வரர்_கோயில்
#திருப்பறியலூர்_கீழபரசலூர் (104/274)

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 41வது தலம். அட்ட வீரட்டானத் தலங்களில் நான்காவது தலம். சிவனார் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்து , தட்சனையும் சம்ஹரித்த தலம்.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்
உற்சவர் : சம்ஹார மூர்த்தி
அம்மன்/தாயார் : இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)
தல விருட்சம் : பலா மரம், வில்வம்
தீர்த்தம் : உத்திரவேதி
புராண பெயர் : திருப்பறியலூர்
ஊர் : கீழப்பரசலூர்
மாவட்டம் : மயிலாடுதுறை

#தல_வரலாறு

தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தை பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர் ஆனது. சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான்.
தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன் தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

#கோவிலமைப்பு

#தட்ச_சம்ஹாரமூர்த்தி

இத்தலத்தின் நாயகராக சிறப்புடன் திகழ்பவர் தட்ச சம்ஹாரமூர்த்தியான வீரபத்திரரே . தெற்கு நோக்கி திருக்காட்சி தரும் இவ் வீரபத்திரர் உற்சவ மூர்த்தம் பேரழகு வாய்ந்தது . இவரது காலடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பதை காணலாம் . இத்திருமேனி அமைந்துள்ள மேடையில் செப்புத் தகட்டில் தட்சன் யாகம் செய்வது போலவும் , பிரம்மன் இருப்பது போலவும் புடைப்புச் சிற்பம் உள்ளது.

தட்ச சம்ஹாரமூர்த்தி சந்நிதி அருகில் நடராஜர் சபை உள்ளது. மூலவர் பெரிய திருமேனியராக சதுரபீட ஆவுடையாரில் கோமுகம் திசை மாறியுள்ள அமைப்புடன் மேற்கு நோக்கி திருக்காட்சி அளிக்கிறார்.
உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.
சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது.
வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது பழமையான கோயில். கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சன்னதிதெரிகின்றது.கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தன்னம் நைவேத்யம் செய்கின்றனர். மயில்மீது காலூன்றி நிற்கும் முருகர் , சோமாஸ்கந்தர் , விநாயகர் , சந்திரசேகரர் முதலானோரின் மூர்த்தங்கள் அழகு நிறைந்தவை. அம்பாள் தனிச்சந்நிதி கொண்டு தெற்கு நோக்கி திருக்காட்சி அளிக்கிறார். நவக்கிரகங்கள் இல்லை . சூரியன் மட்டுமே உள்ளார். பைரவருக்கு அர்த்தஜாம பூஜை சிறப்புடன் நடைபெறும் தலம்.

#பிராத்தனை

சிவபெருமான் வீரம் புரிந்த தலம் என்பதால் வழிபடும் பக்தர்களின் பாவத்தை சிவனார் போக்கியருளும் தலம். மூல சிவனாரின் தரிசனம் சகலவித தோஷங்களையும் போக்கி , கடன் தொல்லைகளை நீக்கி , செல்வச் செழிப்பை தரவல்லதாக சொல்லப்படுகிறது

#நேர்த்திக்கடன்

தோஷ நிவர்த்திக்காக சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது.

#தலபெருமை

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு. எனவே நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை.தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் அழித்த தலம் ஆகும். இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும்.

#திருவிழா

யாகசம்ஹார மூர்த்திக்கு தமிழ்வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசிப்பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தை முதல் தேதி, வைகாசித்திருவோணம் நாட்களில் ஆறு முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதி உலா வருகிறார்.

#தல_சிறப்பு

தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தை தண்டனை மூலம் பறித்த தலம். சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு. நவகிரகத்திற்கென்று சந்நிதி இல்லை. கருவறைச் சுவரில் தட்சன் சிவனாரை வழிபடும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 104 வது தேவாரத்தலம் ஆகும். பழமையான கோயில்.

#அமைவிடம்

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி மற்றும் திருக்கடையூர் செல்லும் வழியில் உள்ள செம்பனார்கோயில் அடைந்து அங்கிருந்து வேறு மினிபேருந்தில் அல்லது ஆட்டோவில் பயணம் செய்து 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கீழபரசலூர் (திருப்பறியலூர் புராண பெயர்) அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து செம்பனார் கோயில் செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன. மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ தொலைவில் கீழபரசலூர் அமைந்துள்ளது.

கோயில் Google map link

https://maps.app.goo.gl/gVCC7cgibdHVc...

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்

+91 9443785616

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

if you want to support us via Google pay phone pay paytm

9655896987

Join this channel to get access to perks:

   / @mathina  

Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/Gyb8IzlcUdb...

- தமிழ்

show more

Share/Embed