தர்மபுரி கடை அடைப்பு முழு வெற்றி வணிகர்களுக்கு பாராட்டு ஜி கே மணி பேட்டி.
balatvdpi balatvdpi
76.2K subscribers
1,044 views
25

 Published On Oct 4, 2024

#GK money press meet#dharmapuri #kadai adhaippu#mulu vetri#vaniki parrot#காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற முழு கடையடைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவித்த  பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி

தர்மபுரி முழுவதும்  இன்று அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது 

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும்  இன்று  அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. எம்.எல்.ஏக்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கடையடைப்பு குறித்த பாமக கௌரவ தலைவர் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்பொழுது இந்த கடையடைப்பு போராட்டம் அறப்போராட்டம் ஆகும்.இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் 100 விழுக்காடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒத்துபை்பு அளித்தன அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.அதற்கு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கும் நன்றி ஊடகத்துறையினருக்கும் நன்றிதெரிவித்த அவர்  முன்னதாக யாரக்கும் எதிரான போராட்ம் அல்ல..எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொண்ட போராட்டம் எந்த கட்சிக்கும் எதிரான போராட்டம் இல்லை.தர்மபுரியில் சாராசரி மழையளவு குறைந்த மாவட்டம் இதனால் மானாவரி பயிர்கள் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்தன   மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் 100 டிஎம்சி தண்ணீர் வீனாக கடலில் கலந்தது.. இதனால் விவசாயிகள பாதிப்பிற்குள்ளாயினர்.சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கூட காவிரி உபரிநீர்திட்டம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டதது.

இந்த போராட்டத்தில் காவல்துறையினர்  பத்திரிக்கையாளர்

சந்திப்பில் ஈடுபட முயன்றபொழுது இரண்டு காவல்துறையினர் ஊடக நண்பர்களை பேட்டி எடுக்க விடாமல் ஔிப்பதிவு கருவிகளை தள்ளிவிட்டது அவமானத்திற்குரிய செயலாகும்.ஜனநாயகத்தில் நான்காவது தூண் பத்திரிக்கை துறையாகும் .

எங்களை அவமானபடுத்தினால் சகித்துக்கொள்வோம்.ஆனால் ஊடக நண்பர்களை அவமானபடுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது..இதனை வன்மையாக கண்டிக்கிறது..மேலும் இந்த கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்தப்படும் என அறிக்கை வெளியிட்டு இருந்தால் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும்.இந்த அறிக்கையில் கூறியது போல உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி என கூறியுள்ளது அவசியமில்லாதது.


 இந்த கடையடைப்பு குறித்து பொதுமக்கள் பரும் ஆதரவு தந்துள்ளனர்.

தற்பொழுது தர்மபுரி மாவட்டம் முழுவதும் வறட்சி துவங்கிவிட்டது.

தர்மபுரி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும்.நீரின்றி அமையாது உலகு ..இந்த காவிரி நீர் 23 மாவட்டங்களுக்கு வாழ்வாதாரம் இந்த நீரை ஒரு துளி கூட வீனாக்க கூடாது...மேலும் தமிழகம் மழுவதும் உள்ள அனைத்து ஆறுகளிலும் பெரும்திட்டம் துவங்கி தடுப்பணைகள் கட்ட வேண்டும்

இந்த நிலையில்  ஏரிகள் பாசனங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்..தர்மபுரி மாவட்டத்தில் பாமக எங்கும் பிரச்சனை இல்லாமல் முழு கட்டுப்பாட்டுன் இந்த போராட்டம் நடைபெற்றது.

தேர்தல் வரும்போகும் வெற்றி தோல்வி வரும் போகும் நல்ல அரசானது மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார்.இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர்   

கலந்து கொண்டனர்

show more

Share/Embed