ஓடிவந்து உதவினோம்.. வாழை கிளைமாக்ஸ் நேரடி சாட்சி | Vaazhai movie real story | Mariselvaraj | UrumiTV
உறுமி URUMI TV உறுமி URUMI TV
15.8K subscribers
32,724 views
195

 Published On Sep 3, 2024

#vaazhaimovie #mariselvaraj #vaazhai #vaazhaireview #realstory #history #agriculture #banana #documentary

🌾🌾🌾🌾🌾🌾🌾
Vaazhai movie real story Documentary with Evidence
   • வாழை சொல்ல மறந்த கதை | Vaazhai movie ...  
🌾🌾🌾🌾🌾🌾🌾

புளியங்குளம், நாட்டார்குளம் கிராம நிலக்கிழார்களும், வேளாண் தொழிலாளர்களும்..

நேரடி சாட்சிகளும், ஆதார ஆவணங்களும்
   • வாழை படத்தில் உள்ளூர் மக்கள் | கண்ணீர...  

மீட்புப் பணியில் இருந்த பேட்மாநகரம், முத்துசாமிபுரம் பகுதி மக்கள்..
   • Video  

21-02-1999 முதல் 24-02-1999 வரை 19 பேர் பலியான விபத்தில் நடந்தது என்ன?

வரலாற்றின் தரவுகளோடு
வாழை படத்தின் உண்மை முகம்

💧💧💧💧💧💧💧

#UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.

உழைப்பின் வலியையும், உழைப்புச் சுரண்டலையும் திரையிட்டுக் காட்டி, கம்யூனிசம் பேசிய வாழை திரைப்படம் திரைமொழியிலும் மின்னியதால் பலதரப்பு பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இயக்குநர் மாரிசெல்வராஜ் சொந்த ஊரான தூத்துக்குடி புளியங்குளம் கிராமத்தின் வாழைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வியல்தான் கதைக்களம்.
குலைதள்ளிய வாழைத்தார்களை, அறுவடை செய்கின்ற போது, வாழைத்தார்களை வாகனத்திற்கு கொண்டு சேர்க்க கூலித் தொழிலாளர்கள் இருப்பார்கள்.
காய் சுமப்பது என்று அழைக்கும் வாழைத்தார் சுமையின் போது ஒருவருக்கொருவர் கேலி, கிண்டல் செய்வது, அலுப்பு தெரியாமல் இருக்க, சுமையின் வலியைத் தவிர்க்க பாடல்களும் பாடுவார்கள்.
மகிழ்வான வாழ்வின் பேரிடிதான் வாழை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் வாழைத்தார் லாரி விபத்து.
அந்த கோரநிகழ்வில் புனியங்குளம், கீழநாட்டார்குளம் கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர்.
1999 பெப்ரவரி 21 வழக்கம் போல வாழைத்தார் சுமக்க கிளம்பினார்கள் புளியங்குளம் மக்கள்,
மாங்கொட்டாபுரம் என்ற கிராமத்தில் காய்சுமந்து முடித்த உடன் இரண்டு லாரிகளில் வாழைத்தார்கள் நிறைந்தன.
எய்போதும் போல தனியாக வாகனம் இல்லாததால்,
இரவு சுமார் 7 மணியளவில் இரண்டாவது கிளம்பிய லாரியின் மீது, ஏறி அமர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பலருக்கும் அதுவே இறுதிப் பயணம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
dhanalakshmi லாரி, வண்டி எண் TN 60 4705 டிரைவர் குணசேகரன் அந்த லாரியை ஓட்டினார்.
மாங்கொட்டாபுரத்தில் கிளம்பிய லாரி சிவகளை- திருவைகுண்டம் சாலையில் வரும்போது பேட்மாநகரம் ஊருக்கு முன்பாக சாலையின் இடதுபுறம் நிலைதடுமாறி குப்புறக் கவிழ்ந்தது.
லாரியில் புளியங்குளத்தைச் சேர்ந்த 30 பேரும், நாட்டார்குளத்தைச் சேர்ந்த 12 பேரும் பயணம் செய்தனர். லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த 9 பேர் தூக்கி வீசப்பட்டனர். மற்றவர்கள் தலைகுப்புற கவிழ்ந்த லாரிக்கு அடியில் வயலின் சகதிக்குள் சிக்கிக்கொண்டார்கள். ஞாயிறு விடுமுறை என்பதால் மாணவர்களும் அதில் இருந்தனர்.
தப்பிப்பிழைத்தவர்கள் ஓடோடிச்சென்று மக்களை உதவிக்கு அழைத்தனர். சிலர் ஆட்களை அழைத்து வந்தனர்.
பெரும்பாரம் ஏற்றிய லாரியை மீட்க / அதனுள் சிக்கிய மக்களை மீட்க இயலவில்லை. அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாலிக் பெரோஸ்கான் IAS , காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்தாஸ் IPS, தீயணைப்புத் துறை வீரர்கள் லாரி விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் மூலம் லாரியை தூக்கி நிறுத்தும்போது சகதியில் சிக்கிய 19 பேர் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர்.
கீழநாட்டார்குளத்தைச் சேர்ந்த ஜெயவதி திருமணம் நடந்து ஆறு மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை.
முத்துரவி, நயினார், முத்துக்குமார் மூவரும் விடுமுறை நாளில் காய் சுமக்க வந்த கருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.
பால்ராஜ் அதே பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவன்,
புளியங்குளம் லட்சுமனன், முத்துரவி, முத்துக்குமார், பால்ராஜ், நயினார், லட்சுமி, பரமேஸ்வரி, முருகம்பாள், ராணி, கஸ்தூரி, புஷ்பம், தர்மர், ரத்தினம், உச்சிமாகாளி, மூக்கம்மாள்.
கீழநாட்டார்குளம் ஜெயபதி, நீலா, மூக்கம்மாள், கோமதி ஆகிய 19 பேர்
கோர விபத்தில் மரணமடைந்தனர்
விபத்தில் காயமடைந்த 14 பேர் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையிலும், திருவைகுண்டம் அரசு மருத்துவமளையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
செய்துங்கநல்லூர் வாழைத்தார் வியாபாரி மேகலிங்கம், தனலட்சுமி லாரி சர்விஸ் ஓட்டுநர் குணசேகரன் , லாரி உரிமையாளர் மீது திருவைகுண்டம் காவல்துறை வழக்குப்பதிந்தது,
தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியை சோகத்தில் ஆழ்த்திய இந்த துயரநிகழ்வு மறுநாள் 22 பெப்ரவரி அன்று மாலை செய்தித்தாள்கள் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. அப்போது சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், ஒட்டப்பிடாரம் MLA வான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்பானம் கொண்டு வந்தார்.
புளியங்குளம் கிராமம் சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது. மணி நாடார் MLA, எதிர்கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள்
ஞானசேகரன், தாமரைக்கனி, பி. ஆர்.சுந்தரம், , தீரன், சிவ புண்ணியம், கிருஷ்ணன், வேலாயுதன், இராமன் ஆகியோரும் கோரிக்கை வைத்தனர்.
சபாநாயகராக PTR பழனிவேல்ராஜன் இருந்தார்.
வாதம் விவாதம் நடந்தது. டாக்டர். கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் 24 பெப்ரவரி 1999 அன்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி லாரி விபத்தில் உயிரிழந்த 19 பேர் குடும்பத்திற்கும் தலா 50ஆயிரம் நிவாரண உதவியினை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
லாரியின் மீதேறி பயணம் செய்ததால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு இல்லை என்று இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. வழக்குகளும் நிற்கவில்லை.
இன்றோ படித்து பட்டம் பெற்றவர்கள், வணிக வாய்ப்பு கிடைத்தவர்கள் தங்கள்
வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளளர்.
ஆனாலும் காய்சுமக்கும் தொழிலலார்கள் வாழ்வில் வலிகளும் துயரங்களும் தொடர்கின்றன.

show more

Share/Embed