கூப்பிட கூப்பிட திரும்பி பாராமல் போவதென்ன கண்ணா - காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான்
38,652 views
243

 Published On Jan 19, 2023

கூப்பிட கூப்பிட திரும்பி பாராமல் போவதென்ன கண்ணா - காக்கிவாடன்பட்டி ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கண்ணபிரான் 114வது புரட்டாசி உற்சவம்

கூப்பிட கூப்பிட திரும்பி பாராமல் போவதென்ன கண்ணா

கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலென்ன குறைந்தா போகும் கண்ணா.. உன்புகழ் (கூப்பிட)

வெண்ணெய் வெளியில், உள்ளம் உன்னில்
வெண்ணெய் உண்ட வாயனே
மண்ணை உண்ட மாயனே (கூப்பிட)


அன்னை யசோதை அழைத்திருந்தால் அங்கே ஓடிச்சென்றிருப்பாய்
அன்புடன் உனை அழைக்கின்றேன் அருகில் ஓடி வாராய்
அன்னை யசோதை பாலகனே ப்ருந்தாவனக்கோபாலனே
அள்ளி அணைத்து மடிமீது அமர்த்திக் கொள்ள துடிக்குதடா


காதில் குண்டலம் அசைந்தாட
கழுத்தில் மணிச்சரம் இசைபாட
காலில் சதங்கை ஜதிபோட
நீ பார்த்தும் பாரா பாவனையே உன்னை (கூப்பிட)

------------------------------------------------------------------------------

@SriKannapiran

#Kakkivadanpatti #SriKannapiran #bhjan

show more

Share/Embed