அஞ்சினான் புகலிடம் என்றால் என்ன அதன் செயல்பாடு என்ன அதை பற்றி கல்வெட்டுகள் என்ன சொல்கின்றது
Kadigai Kadigai
6.97K subscribers
318 views
12

 Published On Dec 13, 2022

தமிழகத்தில் வலிவான பேரரசுகள் இல்லாத நிலையில் ஆங்காங்கு சிறுதலைவர்கள் பூசலில் ஈடுபடுவதும், பயிர் விளைச்சல், செல்வம் முதலியவற்றைக் கொள்ளையிடுவதுமாகத் வலிமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கள் சிற்றூர்களும், குடியிருப்புகளும் தொல்லைக்குள்ளாகிப் பாதுகாப்புத் இதனால் தேடும் நிலை உண்டாயிற்று. வலிமையுடைய குறுநிலத் தலைவர் களையும், தங்களுக்கென்று படைகள் வைத்திருந்த வணிக மற்றும் வேளான் குழுக்களும் பாதுகாப்புத் தர முன்வந்தன. பாதுகாப்புத் தருவோருக்குத் தங்கள் ஊர் பகுதியில் விளைச்சல் அல்லது வரி வருவாயில் ஒரு பகுதியை பிரதிபலனாக அளித்தன. இப்படி அளிக்கப்பட்ட வருவாய், பாடிக்காவல் என்ற பெயரில் தமிழகக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகின்றது. பாதுகாப்பளிக்கப்பட்ட இடம் இவரது பாதுகாப்பில் உள்ளது என்பதனை வெளிப் படுத்தும் வகையில் அவ்வூர் எல்லைப் பகுதியில் கற்கள் நடப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. அப்படிப் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் அவ்விடங்கள் இவரது'ஆசிரியம்' என்றும் இவரதுபாதுகாப்பில் உள்ள ‘அஞ்சினான் புகலிடம்' என்றும் குறிப்பிடப்பட்டன.

சமணர்களும் அஞ்சினான் புகலிடம் உருவாக்கி வைத்திருந்ததை கல்வெட்டுக்கள் கூறுகின்றன அவர்களுடைய நான்கு தானங்களில்
அபய தானம் ஒன்று
அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக்கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலூக்காவில் பள்ளிச்சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இந்த தகவலை சொல்லும் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும், அப்புகலிடத்திற்கு வந்த அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்ராதித்தப் பெரும்புள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது இந்த கல்வெட்டு மூலம் சமணர்களும் தமிழகத்தில் அஞ்சினான் புகலிடம் அமைத்துள்ளார்கள் என்பதை தெளிவாக கல்வெட்டு கூறுகிறது

show more

Share/Embed