சோழர்கால கற்றளிகளும் கல்வெட்டுக்களும் நெடுந்தொடர்
Kadigai Kadigai
6.97K subscribers
261 views
5

 Published On Premiered Dec 10, 2022

சோழர்கால கற்றளிகள் இந்த தொடரில் சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள் பற்றியும் அந்த கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் விரிவாக பார்க்க இருக்கிறோம்


சங்க காலத்தில் இலைகள் மரங்களை வைத்து கோயில் கட்டப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன மரத்திலான கோயில் எளிதில் அழிந்து போனதால் மண்ணால் ஆன கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம் இந்தக் கோயில்களில் எளிதில் அழிந்து போகவே அதற்கு மாற்றாக தமிழகத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் மலைகளை குடைந்துகோயில்களைஉருவாக்கும்முறையைஅறிமுகப்படுத்தினார்கள்
இந்த முறையில்ஏறக்குறைய 100 க்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்களில் தமிழகத்தில் உள்ளன குடைவரைகளில் தொடர்ந்து கற்களை வைத்து கோயில் கட்ட ஆரம்பித்தார்கள் பல்லவர்கள்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வைகுண்ட பெருமாள் கோயில் பணமலை தாளகிரீஸ்வரர் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இவை எல்லாம் பல்லவர் கால ஆரம்ப கால கோயில்கள்இக்கோயில் கலை சோழர் காலத்தில் மிக உன்னதமான வளர்ச்சியை அடைந்தது


சோழ மன்னர்கள் காவேரி கரையை ஒட்டி வடகரை தலங்கள். என்றும் தென்கரைத்தலங்கள். என்றும் ஏராளமான கோயில்கள் கட்டி உள்ளார்கள். தங்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பில் எல்லாம் தங்களுக்கான அடையாளமாக கோயில்களை விட்டுச் சென்றுள்ளார்கள் அந்த கோவிலில் நமக்கு சோழமன்னர்களின் வரலாற்றை அறிய பெரிதும் உதவி வருகின்றன

பிற்கால சோழர் வரலாறு என்பது விஜயாலய சோழன் காலம் தொடங்கி மூன்றாம் ராஜேந்திரன் காலம் வரை நானூத்தி முப்பது ஆண்டுகளாக விஜயாலயன் தொடங்கிவைத்த சோழப் பேரரசு கட்டிடக்கலை வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்து

ஒரு தளத்தில் இருந்து 15 தளங்கள் வரை கொண்ட கோயில்கள் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டன சோழர் காலக் கல்வெட்டுகளில் மண்ணால் ஆன கோயில்கள் அழிந்து போனதையும் அவைகள் சோழர்காலத்தில் மாற்றி கல் கோயிலாக மாற்றம் பெற்றது சோழர்கால கல்வெட்டுகள் மூலமாக தெரியவருகிறது சோழர் கால கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமில்லாமல் அன்றைய கால மக்களுக்கு இன்றைய சுய உதவி குழுக்கள் போல செயல் பட்டதையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது
சோழர் கோயில்களில் சிவன் விஷ்ணு பெண் தெய்வங்கள் கிராம தெய்வங்கள் தக்ஷின மெரு விடங்கர் என்னும் பெயர் பெற்ற கோயில்கள்
மகாதேவர் என்னும் பெயர் பெற்றுள்ள கோயில்கள்
கைலாசம் உடையார்
நாயனார் என தொடங்கும் கோயில்கள் ஊர் பெயருடன் உடையார் என முடியும் கோயில்கள் ஈஸ்வரம் என முடியும் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன சோழர் கால கோயில்கள் கல்வெட்டுகள் மற்றும் கட்டிடக்கலை பற்றி விரிவாக பார்ப்போம்

show more

Share/Embed