இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil 03-10-24 | Today's Bible Gospel | நற்செய்தி வாசகம் |
RSR Tamil Christian Songs RSR Tamil Christian Songs
24.8K subscribers
452 views
38

 Published On Premiered Oct 2, 2024

#dailybibleverses #todaybibleverseintamil #todaysbibleverse #இன்றையநற்செய்திவாசகம் #இன்றையவசனம் #bibleverseoftheday #dailyBibleGospel #dailybibleverse #tamilbible #bibleverse #bible
இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil 03-10-24 | நற்செய்தி வாசகம் | Start your day with the uplifting message from the Bible in Tamil.

Hello Every One,
Welcome to our You Tube Channel to watch more videos on Christian Songs, Christian Old and New Songs, Lyrical Videos, Jukebox, Prayers, Holy Rosary, Today's bible verses, Daily Gospel Text...
Please Support and Subscribe our Channel.

இயேசு நாதரின் இதயத்தில் இருந்து ரத்தம் வடிந்த ஆலயம்:    • மும்பையில் நடந்த புதுமை  | இயேசுவின் ...  
புனித இராயப்பரின் திருவிழா சிறப்பு பாடல்:    • புனித இராயப்பரின் திருவிழா சிறப்பு பா...  
தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த கத்தோலிக்க ஆலயங்கள்:    • தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த கத்தோலிக...  

முதல் வாசகம் 00:00:00
பதிலுரைப் பாடல் 00:1:38
நற்செய்தி வாசகம் 00:03:18
வினாடி வினா 00:05:56

பொதுக்காலம் 26ஆம் வாரம் - வியாழன்

முதல் வாசகம்

என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.

யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27

யோபு கூறியது:
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா? ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக் கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்

திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 (பல்லவி: 13)
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

7
ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8a
‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம். - பல்லவி

8b
ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில்
இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.
வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.



For any Query and Feedback,
Raja Pannilan
9320924253
[email protected]

show more

Share/Embed