குருராகவேந்திரா பக்தி பாடல் | GURURAGHAVENDRA | Subam Audio Vision
Subam Audio Vision Subam Audio Vision
325K subscribers
87,815 views
747

 Published On Premiered Apr 20, 2022

Watch ► GURU RAGHAVENDRA | குரு ராகவேந்திரா | #gururagavendrabakthisongs #ragavendratamilsong #ragavendraspbpadalgal #spbhitsongs #subamaudiovision #குருராகவேந்திராபாடல் #SUBAMRADHA #சுபம்ராதா

Welcome to Subam Audio Vision- was established in the year 1997, as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destinations for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.

வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.

வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.

வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது 'அக்னி சூக்தம்' என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார்.

துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர்

வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include

Thamizh subrabahatham -    • திருப்பதி தமிழ் சுப்ரபாதம் | Tamil su...  
Vettrivel -    • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar...  
Agni Lingam -    • அக்னிலிங்கமாய் சிவனனின் ரூபமாய் பாடல்...  
Iyyanae -    • எரிமேலிகோட்டையாளும் ஐயப்பாபாடல் | Iyy...  
Yaettrividaiyaa :    • இருமுடியை கட்டிக்கிட்டுவாரோம்  சரணம் ...  
Thiruppavai -    • திருப்பாவை திருமலை பக்திபாடல்  | peru...  
Vaikuntha -    • வைகுந்தபெருமாள் பக்திபாடல் | Vaikunth...  
Vaeppilaikari -    • மாசித்தேரில் ஏறிவந்தாலே பாடல் | MASIT...  


Title : GURU RAGHAVENDRA 323 | குரு ராகவேந்திரா
Singer :S.P.Balasubramaniam | எஸ் .பி பாலசுப்ரமணியம்
Lyrics : Varasree | வாரஸ்ரீ
Music : Veeramanikannan | வீரமணிகண்ணன்
Direction & Production : SUBAM RADHA.M | சுபம்ராதா
Copyright By : Subam Audio Vision | சுபம்ஆடியோவிஷன்

show more

Share/Embed